பாக்கிஸ்தானில் இம்ரான் கான் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முனைந்துள்ளன.
.
முதலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான முரண்பாடுகளை பேசியே தீர்க்கவேண்டும் என்று பகிரங்கமாக கூறியிருந்தார். அது மட்டுமன்றி ஜூலை மாத இறுதியில் இம்ரான் கான் இந்திய பிரதமர் மோதியுடனும் தொலைபேசி மூலம் உரையாடி உள்ளார்.
.
கடந்த சனிக்கிழமை இந்திய பிரதமர் மோதியும் இம்ரான் கானுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். மோதியின் அந்த கடிதத்தில் இந்தியா பாகிஸ்தானுடன் நல்ல உறவை பேணவும், முரண்பாடுகளை பேசி தீர்க்கவும் உறுதி கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மோதியின் கடிதம் கிடைத்ததை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
.
இந்தியா நல்லெண்ணத்துடன் ஒரு அடி முன்வைத்தால், தாம் இரண்டு அடி முன்வைக்க உள்ளதாக இம்ரான் கான் கூறியுள்ளார்.
.
1947 ஆம் ஆண்டில் பிரித்தானியரிடம் இருந்து விடுதலை அடைந்த பின்னர் இந்தியாவும், பாகிஸ்தானும் 3 தடவைகள் யுத்தங்களுக்கு சென்றுள்ளன.
.