இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல்கள்

Kashmir

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் காஸ்மீர் பகுதியில் இன்று செவ்வாய் மோதல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இந்த மோதல்களுக்கு பலர் பலியாகி உள்ளனர். ஆனால் மோதல்கள் தொடர்பாக இரு தரப்பும் முரண்பட்ட தரவுகளை வெளியிட்டு உள்ளன.
.
இந்தியா நடாத்திய தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பக்கத்தில் 3 பொதுசனம் பலியானதாக பாகிஸ்தான் கூறி உள்ளது. அத்துடன் தாம் 6 இந்திய படையினரை சுட்டு கொன்றதாகவும் பாகிஸ்தான் கூறி உள்ளது. இந்தியா இதை ஒரு பொய் செய்தி என்று கூறியுள்ளது.
.
காஸ்மீருக்கு நடைமுறையில் இருந்த விசேட உரிமைகளை அண்மையில் இந்திய மத்திய அரசு நீக்கி இருந்தது. அதன் பின் அங்கு போராட்டங்கள் நிலவி வருகின்றன. பாகிஸ்தான் இந்த விசயத்தை ஐ.நா.வுக்கு எடுத்து செல்லவும் விரும்புகிறது.
.
தற்போது காஸ்மீரில் internet, தொலைபேசிகள் என்பன இந்திய அரசால் துண்டிக்கப்பட்டு உள்ளன.

.