தற்போது மும்பாய்க்கு 480 km தென்கிழக்கே தோன்றியுள்ள வாயு (Vayu) என்ற சூறாவளி இந்தியாவையும், பாகிஸ்தானையும் தாக்கவுள்ளதாக வானிலை நிலையங்கள் கூறுகின்றன. குறிப்பாக இந்தியாவின் குஜராத் மாநிலம் இதனால் பலத்த பாதிப்புக்கு உள்ளாகலாம்.
.
தற்போது இந்த சூறாவளியின் காற்று வீச்சு சுமார் 130 km/h ஆக உள்ளது. பின்னர் இதன் காற்று வீச்சு 165 km/h ஆக அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால் இது Category 2 வகை சூறாவளி ஆகலாம். வேறு சில கணிப்புகள் இது Category 1 ஆகலாம் என்றும் கூறுகின்றன.
.
தற்போதைய பாதையிலேயே வாயு சென்றால், அது புதன்கிழமை குஜராத்தை தாக்கலாம். ஒரு கிழமையின் பின்னர் பாகிஸ்தானை தாக்கலாம்.
.
1998 ஆம் ஆண்டில் குஜராத்தை 195 km/h வேகத்தில் தாக்கிய சூறாவளிக்கு சுமார் 10,000 பேர் பலியாகி இருந்தனர்.
.