இந்தியாவுக்கும் அண்டை நாடான நேபாளுக்கும் இடையில் கடந்த சில கிழமைகளாக முறுகல் நிலை ஏற்பாடு உள்ளது. அண்மையில் இந்தியா Kalapani பகுதி ஊடே 80 km நீளம் கொண்ட புதிய வீதி ஒன்றை திறந்து வைத்ததே இந்த முறுகல் நிலைக்கு காரணம். புதிய வீதி செல்லும் பகுதி தனது பகுதி என்கிறது நேபாள்.
.
இந்த புதிய வீதி செல்லும் பகுதி இந்தியா, சீனா, நேபாள் ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் எல்லையோரம் உள்ளது. இந்தியா இந்த வீதியை தன் விருப்பப்படி உருவாக்கி உள்ளது.
.
விசனம் கொண்ட நேபாள் முதல் முறையாக Kalapani பகுதியை உள்ளடக்கி அந்நாட்டில் சட்டப்படியான வரைவை நடைமுறை செய்துள்ளது. இந்த வரைவு நேபாளின் பாராளுமன்றம் செல்ல முன் இந்தியா அது தொடர்பான நேரடி பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. ஆனாலும் நேபாள் இந்தியாவுடன் பேசவில்லை.
.
பிரித்தானியர் ஆட்சிக்கு உட்படாது வெளியே இருந்த நேபாள் 1816 Sugauli உடன்படிக்கைக்கு ஏற்ப Kalapani நேபாளின் அங்கம் என்கிறது நேபாள். இப்பகுதி மக்கள் 1959 ஆம் ஆண்டு இடம்பெற்ற நேபாள் வாக்கெடுப்பில் பங்கெடுத்து இருந்தனர். ஆனால் 1962 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்திய-சீன யுத்த காலத்தில் இந்திய இராணுவம் இப்பகுதியை கைப்பற்றி இருந்தது.
.
நேபாள் இந்தியாவுடன் முரண்பட, சீனா நேபாளுக்கு தேவையான பொருளாதார, கட்டுமான, இராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதை மனதில் கொண்ட இந்திய இராணுவ தலைமை அதிகாரி Mukunda Naravene நேபாள் வேறு ஒருவரின் ( “someone else”) நலனுக்காக செயல்படுகிறது என்றுள்ளார்.
.
நேபாள் சீனாவுடனும் எல்லை முரண்பாடுகளை கொண்டுள்ளது.
.