பாகிஸ்தானுடனான மோதல்களின்போது இந்தியா தாம் இந்து நதியை மறித்து அணை ஒன்று கட்டப்போவதாக கூறி இருந்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட Indus Water Treaty என்ற உடன்படிக்கையை மீறியே இந்தியா அந்த அறிவித்தலை சில தினங்களுக்கு முன் செய்திருந்தது.
.
.
ஆனால் சீனாவில் இருந்து வரும் பிரமபுத்ரா ஆறு விடயத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எந்தவொரு உடன்படிக்கையும் இல்லாதவேளை சீனா பிரமபுத்ராவுக்கு நீரை வழங்கும் கிளை ஆறு ஒன்றை மறித்து, $740 மில்லியன் செலவில் அணை ஒன்றை கட்டவுள்ளதாக கூறியுள்ளது. இதனால் விசனம் கொண்டுள்ளது இந்தியா. பிரமபுத்திரா (சீனாவில் Yarlung என்று பெயர்) ஆறு முதலில் சீனா ஊடாக பாய்ந்து, பின் இந்தியா ஊடாக பாய்ந்து, பின் பங்களாதேசம் ஊடாக பாய்ந்து கடலுள் வீழ்கிறது.
.
.
இது சம்பந்தமாக தாம் சீனாவின் உயர் மட்டத்துடன் கதைக்கவுள்ளதாக இந்தியா இன்று வியாழன் கூறியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படவுள்ள இந்த அணை சுமார் 295 மில்லியன் சதுர மீட்டர் நீரை தடுத்து வைக்கும்.
.