2017 ஆம் ஆண்டுக்கான, சுமார் $619 பில்லியன் வெகுமதியான, அமெரிக்காவின் பாதுகாப்பு வரவுசெலவு திட்டத்தில் ஜனாதிபதி ஒபாமா வெள்ளியன்று கையொப்பம் இட்டுள்ளார். இந்த வரவுசெலவு திட்டத்தின் ஒரு முக்கிய பகுதி இந்தியாவை அமெரிக்காவின் Major Defense Partner என்று வகைப்படுத்துதல் ஆகும். அமெரிக்கா வேறு எந்த ஒரு நாட்டையும் Major Defense Partner என்று வகைப்படுத்தவில்லை.
.
.
மோதியின் இந்திய அரசு இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் உதவியை எதிர்பார்க்கிறது. அதேவேளை வளர்ந்துவரும் சீனாவுக்கு முகம் கொடுக்க அமெரிக்கா இந்தியாவின் உறவை எதிர்பார்க்கிறது.
.
.
அமெரிக்க-இந்திய உறவு சமீபகாலங்களில் வேகமாக வளர்வது போல், ரஷ்ய-பாகிஸ்தான் உறவும் வேகமாக வளர்கிறது. Cold-War காலத்தில் பாகிஸ்தான் இந்தியாவின் உற்ற நண்பனாக இருந்திருக்க, இந்தியா ரஷ்யாவின் உற்ற நண்பனாக இருந்திருந்தது. இந்த புதிய உறவின் ஒரு அங்கமாகவே இந்தியா பாலஸ்தீனரை கைவிட்டு, இஸ்ரவேலின் நட்பு நாடாக மாறி வருகிறது.
.
.
கடந்த செப்டெம்பர் மாதத்தில் முதல் தடவையாக 130 பாகிஸ்தான் இராணுவத்தினரும் 70 ரஷ்ய இராணுவத்தினரும் இணைந்த யுத்த பயிற்சி ஒன்றிலும் ஈடுபட்டு இருந்தனர். மறுபுறம் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலும் China-Pakistan Economic Corridor (CPEC) என்ற திட்டத்துக்கு அமைய ஒரு பெருந்தெரு அமைக்கப்படவுள்ளது. இதற்கு சீனா $46 பில்லியன் செலவிடுகிறது. அப்பாதை பாகிஸ்தான் வசமுள்ள காஸ்மீர் ஊடு செல்லும். இந்த தெரு மூலம் இந்திய தயாரிப்புக்கள் விரைவில் மத்தியகிழக்கை அடையும்.
.
.
இந்தியாவில் தாக்குதல் செய்யும் Lashkar மற்றும் Jaish போன்ற பாகிஸ்தானை தளமாக கொண்ட ஆயுத குழுக்களை பயங்கரவாதிகள் என்று வகைப்படுத்தவும் இந்தியா விரும்பியது. அவ்வாறு வகைப்படுத்தலை இந்திய நகரான கோவாவில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற BRICS மாநாட்டின் போது செய்ய இந்தியா முனைந்தது. ஆனால் அதற்கும் ரஷ்யா ஆதரவு வழங்கியிருக்கவில்லை.
.