Elon Musk என்ற அமெரிக்காவின் மின்னில் இயங்கும் EV வாகனங்களை தயாரிக்கும் Tesla நிறுவன அதிபர் திடீரென சீனாவில் தோன்றியுள்ளார்.
Elon Musk கடந்த கிழமை இந்தியா சென்று பிரதமர் மோதியை சந்தித்து Tesla நிறுவனத்தின் இந்திய சந்தையை அங்கு விரிவாக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் “very heavy Tesla obligations” என்ற காரணம் கூறி Musk இந்தியா செல்வதை இடைநிறுத்தி இருந்தார்.
ஆனால் அவர் தற்போது சீனாவில் உள்ளார். அங்கு அவர் சீன பிரதமர் உட்பட பல அதிகாரிகளுடன் உரையாடி வருகிறார். சீனாவில் இவர் தனது இரண்டு திட்டங்களுக்கு ஆதரவு தேடுகிறார் என்று கூறப்படுகிறது.
ஒன்று சீனாவில் Tesla நிறுவனத்தின் Full Self-Driving software இயங்க அனுமதி பெறல். இரண்டாவது சீனாவில் Tesla வாகனங்கள் சேகரிக்கும் தரவுகளை அமெரிக்காவுக்கு எடுத்து செல்ல அனுமதி பெறல்.
Tesla அமெரிக்காவுக்கு வெளியே முதலாவது தொழிற்சாலையை சீனாவின் ஷாங்காய் நகரில் 2018ம் ஆண்டு ஆரம்பித்து இருந்தது. இதுவரை சுமார் 1.7 மில்லியன் EV வாகனங்களை Tesla சீனாவில் விற்பனை செய்துள்ளது.
ஆனாலும் Tesla தற்போது BYD, Xiaomi போன்ற சீன நிறுவனங்களின் வருகையால் உலக சந்தையில் பின்தள்ளப்பட்டு வருகிறது.