அடுத்த ஆண்டு பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள G7 மாநாட்டில் கலந்துகொள்ள G7 அமைப்பில் அங்கம் கொண்டிராத இந்தியா, அஸ்ரேலியா, தென்கொரியா ஆகிய நாடுகளை அழைத்து உள்ளார் பிரித்தானிய பிரதமர் Boris Johnson.
அத்துடன் அடுத்த மாதம் இந்தியாவில் இடம்பெறவுள்ள சுதந்திரதின விழாவுக்கும் பிரித்தானிய பிரதமர் செல்லவுள்ளார். ஆட்சியில் உள்ள பிரித்தானிய பிரதமர் இந்திய சுதந்திரதின விழாவில் கலந்து கொள்வது இம்முறை இரண்டாம் தடவையாக இருக்கும். 1993 ஆம் ஆண்டு பிரதமர் John Major இந்திய சுதந்திரதின விழாவில் பங்குகொண்டிருந்தார்.
சீனாவுக்கு எதிராக அணி அமைக்கும் நோக்கில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் இந்தியாவை தம் பக்கம் இழுக்க கடுமையாக முயன்று வருகின்றன. ஆனால் அந்த அணி ரஷ்யாவுக்கு எதிரானதாகவும் அமையும்.
அமெரிக்காவின் விருப்பத்துக்கு இணங்க பிரித்தானிய சீனாவின் Huawei நிறுவனத்தின் 5G தொழில்நுட்பத்தை தடை செய்திருந்தது. சீனா புதிய சட்டங்களை உருவாக்கி ஹாங் காங் மீது தனது கட்டுப்பாட்டை மேலும் உரமாக்கியது. இந்த விசயனங்கள் சீன-பிரித்தானிய உறவை பலமாக பாதித்தன.
பிரித்தானிய வெளியுறவு செயலாளர் Dominc Raab இன்று செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ளார். நாளை புதன் அவர் பிரதமர் மோதியை சந்திப்பார்.
இந்த ஆண்டு அமெரிக்காவில் இடம்பெறவிருந்த G7 மாநாட்டுக்கு மேற்படி 3 நாடுகளையும் ரம்பும் அழைத்து இருந்தார். அனால் கரோனா காரணமாக இந்த ஆண்டின் G7 அமர்வு இடைநிறுத்தப்பட்டு இருந்தது.