2023ம் ஆண்டு இடம்பெற்ற Hardeep Singh Nijjar படுகொலை உட்பட கனடாவில் இடம்பெற்ற சில படுகொலைகள் தொடர்பாக இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே இன்று திங்கள் மீண்டும் முரண்பாடு தோன்றியுள்ளது.
ஞாயிறு கனடா தனது diplomatic communication ஒன்றில் Sanjay Kumar Verma என்ற கனடாவுக்கான இந்திய தூதுவரும், சில இந்திய தூதரக அதிகாரிகளும் படுகொலைகளில் “persons of interest” என்று கூறியிருந்தது.
இதனால் விசனம் கொண்ட இந்தியா கனடிய பிரதமர் ரூடோ தேர்தல் வாக்கு பெறும் நோக்க அரசியல் செய்கிறார் என்று சாடியுள்ளது. அது மட்டுமன்றி கனடாவுக்கான இந்திய தூதுவரையும் இந்தியா திருப்பி அழைத்துள்ளது.
அத்துடன் கனடா சீக்கிய பயங்கரவாதிகளை வளர்க்கிறது என்றும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியா கனடாவிடம் படுகொலை குற்றத்தை நிரூபிக்கும் ஆதாரத்தை கேட்டுள்ளது. ஆனால் கனடா அதை இந்தியாவுக்கு இதுவரை வழங்கவில்லை. ஆதாரத்தை அமெரிக்கா போன்ற ஒரு மேற்கு நாடு வழங்கியிருந்தால் அதை கனடா இலகுவில் பகிரங்கம் செய்யமுடியாதிருக்கும்.