சீன உற்பத்தியில் முழுமையாக தங்கி இருப்பது தனக்கு ஆபத்தாக அமையலாம் என்று பயந்த அமெரிக்கா இந்தியாவில் இருந்து தனக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது.
இவ்வாறு சீன supply chain னில் இருந்து தம்மை de-risk செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா கருதினாலும் உண்மையில் தற்போதும் அமெரிக்கா சீன supply யில் தங்கி உள்ளது என்று Global Trade Research Initiative போன்றவற்றின் ஆய்வுகள் கூறுகின்றன.
இதற்கு காரணம் பெருமளவு இந்திய உற்பத்தியாளர் சீன மூலப்பொருட்களையே தொடர்ந்தும் பயன்படுத்துகின்றனர். இந்த மூலப்பொருட்கள் தடைப்பட்டால் அமெரிக்காவுக்கான உற்பத்தியும் தடைப்படும்.
தொழில்நுட்ப உற்பத்தி, சூரிய/காற்று மூல உபகரண உற்பத்தி, மருந்துவகை போன்றவற்றுக்கு தேவையான மூல பொருட்களின் 66% சீனாவில் இருந்தே பெறப்படுகின்றன.
ஏப்ரல் மாதம் முதல் இதுவரை Luxshare உட்பட குறைந்தது 11 பெரிய சீன முதலீடுகள் இந்தியாவில் இயங்க அனுமதி வழங்கப்படுள்ளன. சீன Vivo டெல்லியில் புதிய தொழில்சாலையை ஆரம்பிக்கிறது. சீன SAIC கார் உற்பத்தி நிறுவனம் இந்தியாவின் JSW வுடன் இணைந்து 1 மில்லியன் மின்னில் இயங்கும் கார்களை தயாரிக்க இணங்கி உள்ளன.