இந்தியாவுக்கு ரம்ப் பொருளாதார அழுத்தம்

India-US

அடுத்த மாதம் இந்தியா செல்லவுள்ள அமெரிக்க சனாதிபதி ரம்ப் தற்போது இந்தியாவை பொருளாதார உடன்படிக்கைகளுக்கு அழுத்தி வருகிறார். இந்தியா குறைந்தது $5 முதல் $6 பில்லியன் பெறுமதியான அமெரிக்க apple, almond, walnut, தானியம் போன்ற உணவு பொருட்களை (farm goods) கொள்வனவு செய்ய வேண்டும் என்கிறார் ரம்ப். அத்துடன் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரிகளையும் குறைக்கும்படி கூறுகிறார் ரம்ப்.
.
இந்தியா அனுபவித்து வந்த அமெரிக்காவின் Generalized System of Preferences (GSP) என்ற சலுகையை அண்மையில் ரம்ப் நிறுத்தி இருந்தார். இந்த சலுகை சுமார் $5.6 பில்லியன் பெறுமதியான இந்திய பொருட்கள் அமெரிக்காவுக்கு இறக்குமதி வரி இன்றி இறக்குமதி செய்ய வசதி செய்தது.
.
அமெரிக்காவின் GPS சலுகை நிறுத்தப்பட்டவுடன் இந்தியாவும் அமெரிக்க பொருட்கள் சிலவற்றுக்கு மேலதிக இறக்குமதி வரிகளை விதித்தது.
.
அடுத்த மாதம் ரம்ப்  இந்தியா செல்ல இருப்பதால், அதற்கு முன் ரம்ப் தன் விருப்பங்களுக்கு ஏற்ப வர்த்தக உடன்படிக்கைகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
.
2018 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் சுமார் $142.6 பில்லியன் ஆக இருந்தது.
.