இதுவரை காலமும் இந்தியாவில் விலை உயர்ந்த motorcycle வகை சந்தையில் முன்னணியில் இருந்த Royal Enfield motorcycle களுக்கு போட்டியாக அமெரிக்காவின் Harley-Davidson தனது X440 motorcycle ஐ அறிமுகம் செய்துள்ளது.
வழமையாக மிகவும் உயர்ந்த விலை Harley-Davidson மிகவும் மலிவு விலை கொண்ட X440 ஐ அறிமுகம் செய்வது Royal Enfield க்கு பலத்த போட்டியாக அமையும். Harley-Davidson X440 ஒன்று சுமார் 233,000 இந்திய ரூபாய்க்கு ($2,840) விற்பனையாகும்.
Royal Enfield நிறுவனத்தின் Classic 350 சுமார் 193,000 இந்திய ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை Triumph என்ற பிரித்தானிய motorcycle நிறுவனமும் மிக மலிந்த விலையில் தனது Triumph Speed 400 motorcycle ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது 250 cc க்கும் அதிகமான அளவிலான motorcycle சந்தையில் 90% க்கும் அதிக சந்தையை Royal Enfield கொண்டிருந்தாலும், விரைவில் இந்த பங்கு 75% ஆக குறையலாம் என்று கருதப்படுகிறது.
இந்த செய்திகளால் Royal Enfield பங்கு சந்தை பெறுமதி 12.5% ஆல் விழுந்துள்ளது.
Harley Davidson முன்னர் மிக அதிக விலை motorcycle களை இந்தியாவில் விற்பனை செய்ய முயன்று, தோல்வி கொண்டு, 2020ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறி இருந்தது.