இந்திய தேர்தல் ஆணையாளர் அலுவலகம் கடந்த 45 தினங்களில் 46.5 பில்லியன் இந்திய ரூபாய் ($557 மில்லியன்) பெறுமதியான பணம், மது, போதை போன்ற பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக கூறியுள்ளது.
இவை வாக்காளரின் ஆதரவை சட்டவிரோதமாக கையூட்டு வழங்கி பெற பயன்படுத்தப்பட இருந்தவை என்கிறது தேர்தல் ஆணையாளர் அலுவலகம்.
2019ம் ஆண்டில் 34.75 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன. இம்முறை அத்தொகை 46.5 பில்லியன் ஆக அதிகரித்துள்ளது.
திங்கள் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தமிழ்நாடு வந்தபோது அவரின் ஹெலியும் தேடுதல் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
இந்திய தேர்தல் ஏப்ரல் 19ம் திகதி முதல் ஜூன் 1ம் திகதி வரை 7 கட்டங்களில் இடம்பெறும்.