பெரும்பான்மையாக இந்துக்களை கொண்ட இந்தியாவில் தற்போது சுமார் 39% மக்கள் மட்டுமே சைவ உணவுகளை மட்டும் உண்போராக (vegetarians) உள்ளனர் என்கிறது அமெரிக்காவை தளமாக கொண்ட PEW research center என்ற ஆய்வு அமைப்பு.
இந்திய அரசியலில் இந்துவாதம் பெருகினாலும், இந்திய அடுக்களையுள் மாமிசம் வேகமாக பரவி வருகிறது. இந்திய இந்துக்களை மட்டும் கருத்தில் கொண்டால், 44% இந்துக்கள் மட்டுமே சைவம் மட்டும் உண்போராக உள்ளனர்.
மத அடிப்படியில் நோக்கிகினால் சுமார் 92% ஜெயின் மதத்தவரும், சுமார் 59% சீக்கியரும் மாமிசம் உணாதோராக உள்ளனர். இந்த தொகைகள் இந்துக்களின் தொகையிலும் அதிகம்.
மாமிசம் உண்ணும் இந்துக்களில் சுமார் 30% மானோர் கிழமையில் சில நாட்களில் மட்டும் மாமிசம் உண்பதில்லை. அந்த நாட்கள் பொதுவாக அவர்களின் விரத காலங்கள்.
சுமார் 25% புத்த மதத்தினரும், 10% கிறிஸ்தவர்களும், 8% இஸ்லாமியரும் கூடவே மாமிசம் உண்ணாதோராக உள்ளனர்.
இந்த ஆய்வு 2019ம் ஆண்டு 17ம் திகதி முதல் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி வரை செய்யப்பட்டது.