போலி கட்சிகள் என்று சந்தேகிக்கப்படும் 255 கட்சிகளை இந்தியா தடை செய்துள்ளது. இந்த கட்சிகள் கடந்த 10 வருடங்களாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட்டு இருந்திருக்கவில்லை. இவை யாவும் பெயரளவில் மட்டுமே கட்சிகள். கடந்த வருடத்தில் சுமார் 1,866 கட்சிகள் பதிவாகி இருந்த இந்தியாவில் தற்போது 2,045 கட்சிகள் பதிவாகி உள்ளன.
.
.
இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு பெருமளவு வருமான வரி சலுகைகள் உண்டு. அத்துடன் சுமார் 20,000 இந்திய ரூபாய்கள் வரை கிடைக்கும் நன்கொடைகளுக்கு நன்கொடையாளர் பெயர் விபரம் பதியப்படல் அவசியமில்லை. இந்த விதிமுறைகள் பணத்தை ஒளிக்க வசதி செய்துள்ளன. அதனாலேயே பலர் இயங்காத கட்சிகளை ஆரம்பித்து பணத்தை ஒளிக்கின்றனர் என்று கருதப்படுகிறது.
.
.
அண்மையில் உயர் பெறுமானம் கொண்ட இந்திய நாணய தாள்கள் தடை செய்யப்பட்டபோது, வேகமாக கட்சிகளும் உருவாகி உள்ளன. இந்தவகை கட்சிகளை விசாரணை செய்த அதிகாரிகள், இவற்றுள் பல தனியார் வீட்டு முகவரிகளை தமது கட்சி முகவரியாக பயன்படுத்தியதை அறிந்துள்ளனர்.
.