இந்தியாவில் 1 மில்லியன் கரோனா நோயாளிகள்

India_Corona

இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவின் அடையாளம் காணப்பட்ட கரோனா நோயாளிகள் தொகை 1 மில்லியன் (1,000,000) ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,000 புதிய கரோனா தொற்றியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். உலக அளவில் 3ஆவது அதிகூடிய கரோனா தொற்றியோர் தொகையை இந்தியா கொண்டுள்ளது. அத்துடன் 25,000 பேருக்கும் மேலான தொகையினர் இந்தியாவில் கரோனாவுக்கு பலியாகியும் உள்ளனர்.
.
மார்ச் மாதம் இந்தியா மக்கள் நடமாட்டத்தை கடுமையாக முடக்கி இருந்தாலும், ஜூன் மாதம் முடக்கம் நீக்கப்பட்டு இருந்தது. முக்கியமாக பொருளாதார நலன்களை நோக்கில் கொண்டே முடக்கம் நீக்கப்பட்டது. இந்தியாவின் பெரு நகரங்களில் நிலவிய கரோனா தற்போது அங்குள்ள சிறிய கிராமங்களுக்கும் பரவ ஆரம்பித்து உள்ளது.
.
சுமார் 1.3 பில்லியன் மக்களை கொண்ட இந்தியாவின் 60% மக்கள் வறியவர்கள் என்று கூறப்படுகிறது. அத்துடன் சுமார் 21% மக்கள் நாள் ஒன்றுக்கு $2 வருமானத்தில் வாழ்கின்றனர். கை கழுவும் வசதிகள், முக கவசங்கள் போன்ற கரோனா தொடர்பான பாதுகாப்பு வசதிகள் இவர்களுக்கு கிடைப்பது மிக குறைவு.
.
மஹாராஷ்ட்ரா மாநிலமே அதி கூடிய கரோனா தொற்றியோரை கொன்டுள்ளது. இங்கு சுமார் 280,000 பேர் கரோனா தொற்றி உள்ளனர். தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் (48,000), கர்நாடகா மாநிலம் மூன்றாம் இடத்திலும் (28,000), டெல்லி நகர்ப்பகுதி நாலாம் இடத்திலும் (18,000), ஆந்திர பிரதேசம் ஐந்தாம் இடத்திலும் (17,000) உள்ளன.
.
உலக அளவில் தற்போது:
கரோனா தொற்றியோர் தொகை: 13.8 மில்லியன் (13,849,402)
மரணித்தோர் தொகை: 591,764
குணமடைந்தோர் தொகை: 7.7 மில்லியன் (7,728,174)
.
அமெரிக்காவில் தொற்றியோர்: 3.6 மில்லியன் (3,606,927)
அமெரிக்காவில் மரணித்தோர்: 138,649
.
பிரேசிலில் தொற்றியோர்: 2 மில்லியன் (2,012,151)
பிரேசிலில் மரணித்தோர்: 76,688
.