இந்தியாவில் இன்று ஞாயிறு காலை 3:00 மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்து ஒன்றுக்கு 100 மேற்பட்டோர் பலியாகியும், 200 வரையானோர் காயமடைந்தும் உள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்து Indore நகரில் இருந்து பீகார் மாநிலத்து Patna நகர்வரை செல்லும் Indore-Patna Express என்ற ரயிலே இவ்வாறு உத்தர பிரதேச மாநிலத்து கான்பூர் நகரில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியது. தடம்புரண்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
.
.
இவ்விபத்தில் குறைந்தது 14 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு உள்ளன. காயமடைந்தோர் கான்பூர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளனர். கான்பூர் பல ரயில்வழிகள் சந்திக்கும் பிரதானதோர் சந்தியாகும்.
.
.
மரணித்தோர்க்கு 3.5 இலச்சம் ரூபாயும், காயமடைந்தோர்க்கு 50,000 ரூபாயும் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய பிரதமர் மோதி தனது அனுதாபத்தையும் தெரிவித்து உள்ளார்.
.
.
Indore-Patna Express மொத்தம் 1,772 km நீளத்தை சுமார் 26.5 மணித்தியாலங்களில் கடக்கும் சேவையாகும்.
.
சுமார் 10 நிமிடங்களுக்கு முன்னர் அதே இடத்தால் Sabarmati Express என்ற ரயில் சேவை தடங்கல் எதுவுமின்றி பயணித்து உள்ளதாம்.
.