இந்தியாவில் மீண்டும் ஆபத்தான புகை மண்டலம்

இந்தியாவில் மீண்டும் ஆபத்தான புகை மண்டலம்

இந்தியாவை, குறிப்பாக சுமார் 20 மில்லியன் மக்களை கொண்ட தலைநகர் டெல்லியை, உடல் நலத்துக்கு ஆபத்தான புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனால் பாடசாலைகள் மூடப்பட்டு உள்ளன.

உழவர்கள் அறுவடையின் பின் அடி கட்டைகளை எரித்தல், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, கட்டுமான இடங்களில் இருந்து வரும் தூசு எல்லாம் வளிமண்டலத்தின் அடியில் தேங்கி உள்ளன.

வெள்ளிக்கிழமை டெல்லியில் ஒரு கன மீட்டர் வளியில் 470 மைக்ரோ கிராம் அல்லது அதற்கும் அதிகமான மாசுகள் உள்ளன. பொதுவாக 250 மைக்ரோ கிராம் Unhealthy ஆகவும், 500 மைக்ரோ கிராம் Hazardous ஆகவும் கணிக்கப்படும்.

இந்தியாவில் எரியும் தீயை நாசாவின் செய்மதி மேலுள்ள படத்தில் காட்டுகிறது.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் பதிவு செய்த வாசிப்புகளின்படி ஆண்டுதோறும் பின்வரும் எண்ணிக்கையிலான தினங்களிலேயே டெல்லியில் சுவாசத்துக்கு தகுந்த வளி (PM2.5 த்தின் அளவு கன மீட்டருக்கு 12 மைக்ரோ கிராம் அல்லது அதிலும் குறைந்த அளவு) இருந்துள்ளது:

2021ம் ஆண்டு 13 தினங்கள் மட்டும்
2020ம் ஆண்டு 29 தினங்கள் மட்டும்
2019ம் ஆண்டு 18 தினங்கள் மட்டும்
2018ம் ஆண்டு 17 தினங்கள் மட்டும்
2017ம் ஆண்டு 17 தினங்கள் மட்டும்
2016ம் ஆண்டு 3 தினங்கள் மட்டும்
2015ம் ஆண்டு 14 தினங்கள் மட்டும்