தற்போது இந்தியாவில் பெண்கள் திருமணம் செய்ய குறைந்தது 18 வயதை கொண்டிருத்தல் அவசியம். ஆனால் தற்போது பாராளுமனறத்தில் உள்ள Prohibition of Child Marriage (Amendment) Bill 2021 அந்த வயதெல்லையை 21 ஆக உயர்த்தவுள்ளது.
இந்த வயது அதிகரிப்பில் இருந்து தப்பிக்கொள்ள பெருமளவு பெற்றார் தமது மகள்களுக்கு விரைந்து திருமணம் செய்ய முனைகின்றனர். அதனால் திருமண சேவைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில திருமண சேவைகளுக்கான செலவு 3 மடங்கு வரை அதிகரித்து உள்ளது.
நகர் பகுதி பெண்கள் உயர் கல்வி, தொழில் போன்றவற்றில் ஈடுபட்டிருக்க கிராமப்புற பெண்கள் அவ்வகை காரணம் எதுவும் இல்லை என்றாலும் திருமணத்துக்கு 21 வயது வரை காத்திருக்க நேரிடும்.
அது மட்டுமன்றி இந்திய நகர்புறத்தில் மேற்கு நாடுகளின் திருமணத்துக்கு அப்பாலான boyfriend/girlfriend வாழ்க்கைமுறை பரவி இருக்கையில் கிராமப்புறங்கள் இந்நிலை அற்றும் உள்ளன.
இந்த முயற்சி மறைமுகமாக இந்தியாவின் சனத்தொகையை குறைக்கவும் பயன்படும்.
ஐ.நா. 18 தற்போதும் வயதையே திருமணத்துக்கான மிக குறைந்த வயதாக கொண்டுள்ளது.