இந்தியாவில் ஜப்பான் பிரதமர், $2 பில்லியன் கடனுதவி

ManmohanAbe

ஜப்பானின் பிரதமர் Shinzo Abe தற்போது இந்தியாவுக்கு சென்றுள்ளார். இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பலரை சனிக்கிழமை சந்தித்துள்ள Abe இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் பொருளாதார மற்றும் பாதுகாப்பு திட்டங்களுக்கு உடன்பட்டுள்ளார்.

இதன் ஒரு அங்கமாக ஜப்பான் இந்தியாவுக்கு $2 பில்லியன் (200 பில்லியன் யென் ) கடன் உதவி செய்யவுள்ளது. இந்த கடன் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் subway (நிலக்கீழ் train) கட்டவும், renewable energy உருவாக்களுக்கும் பயன்படுத்தப்படும்.

அத்துடன் ஜப்பான் இந்தியாவின் மேற்கு பகுதிகளில் உள்ள train சேவைகளில் அதிவேக ரயில்களை பயன்படுத்தவும் உதவும். ஜப்பான் இங்கு தனது அதிவேக train களான Shinkansen bullet train களை விற்பனை செய்யவும் முனைகிறது. இவை சாதாரணமாக 250 km முதல் 300 km வரை பயணிக்க வல்லன.

இந்தியாவினதும் ஜப்பானினதும் படைகளுக்கு இடையிலும் உறவுகளை வளர்க்க இரு தரப்பும் முனைகின்றன. இந்த வருட இறுதியில் இந்த இரு நாடுகளும் ஜப்பானை அண்டிய கடலில் பயிற்சிகளில் ஈடுபடவும் உள்ளன.