இந்தியாவில் குரங்குகளுடன் வாழ்ந்த சிறுமி

ForestDurga

சுமார் 8 முதல் 10 வயது வரை மதிப்பிடக்கூடிய சிறுமி ஒருத்தி உத்தர பிரதேச காடுகளில் வாழ்ந்து வந்தது சில நாட்களின் முன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த சிறுமி எந்த மொழியிலும் கதைக்கும் வல்லமை இன்றியும், குரங்குகளுக்கான இயல்புகளை கொண்டும் உள்ளாள்.
.
இந்தியா-நேபாளம் எல்லை பகுதியில் உள்ள Katarniaghat சரணாலய பகுதில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிறுமியை மீட்க சென்ற போலீசாரை குரங்கு கூட்டம் ஒன்று தாக்கியதாக Suresh Yadav என்ற போலீசார் கூறியுள்ளார்.
.
இந்த சிறுமியை கையாளும் வைத்தியர்கள் அவள் நீண்ட கூந்தல், நீண்ட நகம் ஆகியவற்றை கொண்டுள்ளாள் என்றும் இவள் முன்னர் கால்கள், கைகள் இரண்டையும் பயன்படுத்தி நடந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இவை எவ்வளவு காலம் குரங்குகளுடன் வாழ்ந்தாள் என்று அறியப்படவில்லை. இவள் விரைவில் Lucknow Medical Collegeக்கு அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
.
இவளின் பெற்றாரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தற்போது ஈடுபட்டு உள்ளனர்.

.