இன்று சனிக்கிழமை வரை இந்தியாவில் கரோனா தொற்றியோர் தொகை 4 மில்லியன் (4,023,179) ஆக அதிகரித்து உள்ளது. உலக அளவில் கரோனா தொற்றியோர் தொகையில் இந்தியா 3 ஆம் இடத்தில் உள்ளது. விரைவில் இந்தியா கரோனா தொற்றியோர் தொகையில் உலக அளவில் இரண்டாம் இடத்தை அடையலாம்
சனிக்கிழமை மட்டும் இந்தியாவில் கரோனா தொற்றியோர் தொகை 86,432 ஆல் அதிகரித்து உள்ளது. வெள்ளிக்கிழமை அத்தொகை 93,000 ஆல் அதிகரித்து உள்ளது.
கரோனாவுக்கு பலியானோர் தொகையிலும் இந்தியாவே 3 ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் சுமார் 70,000 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிக கரோனா நோயாளிகளை கொண்டுள்ளன.
முதலாம் இடத்தில் உள்ள அமெரிக்காவில் கரோனா தொற்றியோர் தொகை 6.2 மில்லியன், மரணித்தோர் தொகை 188,500. இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலில் கரோனா தொற்றியோர் தொகை 4,091,801, மரணித்தோர் தொகை 126,000.
உலக அளவில் கரோனா தொற்றியோர் தொகை 27 மில்லியனை அண்மிக்கிறது. மரணித்தோர் தொகை 900,000 ஐ அண்மிக்கிறது.