இந்த கிழமை இந்தியாவில் சட்டமாக்கப்பட்ட Citizenship Amendment Bill (CAB) என்ற சட்டத்தால் அங்கு பல இடங்களில் கலவரங்கள் இடம்பெறுள்ளன. குறிப்பாக இஸ்லாமியர்களை அதிகமாக கொண்ட, பங்களாதேசத்தின் எல்லையோர மாநிலமான, அசாம் மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
.
அங்கு இடம்பெறும் கலவரங்களுக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளார். மேலும் பலர் காயமனடைந்தும் உள்ளனர். கலவரங்களை அடக்க 26 இந்திய படையணிகள் அசாமுக்கும், 3 படையணிகள் திரிபுராவுக்கும் அனுப்பப்பட்டு உள்ளனர்.
.
பெருமளவு பங்களாதேச இஸ்லாமியர் அசாம் மாநிலத்துக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். அதில் பங்களாதேச சுதந்தரத்துக்கு (1971) முன்னர் வந்தோரும், பின்னர் வந்தோரும் அடங்குவர். அசாமில் 1/3 பங்கு மக்கள் இஸ்லாமியர் என்று கூறப்படுகிறது. காஸ்மீருக்கு அடுத்ததாக இஸ்லாமியரை அதிகம் கொண்ட மாநிலம் அசாம் ஆகும்.
.
அதேவேளை இஸ்லாமியரை அதிகம் கொண்ட பங்களாதேசத்தில் சுமார் 16 மில்லியன் இந்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
.
புதிய CAB சட்டப்படி பாகிஸ்தான், பங்களாதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர் அல்லாதோர்க்கு இந்தியா குடியிருமை வழங்கும். இந்த சட்டம் இஸ்லாமியரை திட்டமிட்டு தவிர்த்தால் பா.ஜ. கட்சி எடுத்த இஸ்லாம் விரோத சட்டமாகவே இது கருதப்படுகிறது.
.
இந்துவாத மோதி அரசு ஒரு மாதத்தின் முன் காஸ்மீரின் மேலதிக உரிமைகளையும் பறித்து, மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவந்திருந்தது.
.
இந்த சட்டத்தில் இலங்கையில் இருந்து சென்ற இந்து தமிழர்களும் கருத்தில் கொள்ளப்படவில்லை.
.