இந்திய Gupta குடும்பம் ஒன்றும், ஜெர்மனியின் SAP என்ற பிரபல software நிறுவனமும் தென் ஆபிரிக்காவில் ஊழல் செய்துள்ளதாக AmaBhungane என்ற புலனாய்வு பத்திரிகையாளர் குழு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஊழல் தென் ஆபிரிக்க ஜனாதிபதியின் மகன் Duduzane Zuma மூலமாக இடம்பெற்று உள்ளதாம்.
.
.
Transnet என்ற தென் ஆபிரிக்க அரச நிறுவனத்து திட்டம் ஒன்றை அமைக்கும் உரிமையை பெற SAP $8.21 மில்லியன் இலஞ்சம் வழங்கியுள்ளது என்கிறது இந்த குற்றச்சாட்டு. அந்த இலஞ்சத்தை Gupta சகோதரர்களின் CAD House என்ற நிறுவனம் மூலமே வழங்கப்பட்டு உள்ளதாம்.
.
.
Ajay, Atul, Rajesh மற்றும் Varun Gupta சகோதரர்களின் CAD House என்ற நிறுவனத்தில் தென் ஆபிரிக்க ஜனாதிபதி Jacob Zumaவின் மகன் Duduzane Zumaவுக்கு 10% உரிமையும் உண்டாம். இந்த Gupta சகோதரர்கள் உத்தர பிரதேசத்தில் பிறந்திருந்தாலும், 1993 ஆம் ஆண்டு முதல் அவர்கள் தென் ஆபிரிக்காவிலேயே வாழ்கின்றனர். 2016 ஆம் ஆண்டில் Atul தென் ஆபிரிக்காவின் 7வது பெரிய பணக்காரராக இருந்திருந்தாராம்.
.
.
அண்மையில் பகிரங்கத்து வந்திருந்த சுமார் 200,000 emailகளை இந்த பத்திரிகையாளர் ஆராய்ந்து உள்ளனர்.
.
SAP நிறுவன managing director Brett Parker இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ஆனால் அவரை SAP நிறுவனம் தற்போது விடுமுறையில் வைத்துள்ளது.
.
.
இந்த Gupta குடும்பம் தென் ஆபிரிக்க அரசின் Eskom என்ற மின் திணைக்களத்திலும் ஊழல் செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன.
.
.
இந்த Gupta குடும்பம், அவர்களின் Tegeta என்ற நிறுவனம் மூலம், தென் ஆப்பிரிக்காவின் Optimum என்ற சுரங்கத்தையும் முறைகேடாக கொள்வனவு செய்துள்ளாராம்.
.