சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல பாகங்களிலும் வேகமாக பரவி உள்ளது. சீனாவுள் பரவல் சற்று குறைத்தாலும், சீனாவுக்கு வெளியே வழமைக்கு மாறாக பரவல் அதிகரித்து உள்ளது.
.
இத்தாலியில் தற்போது 3 பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகியும், சுமார் 150 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். அதனால் இத்தாலியில் Milan Fashion Week, Venice Carnival உட்பட பல பொது நிகழ்வுகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
.
தென் கொரியாவில் கொரோன வைரஸின் பாதிப்புக்கு உள்ளானோர் தொகை 763 ஆக அதிகரித்து உள்ளது.
.
உலக அளவில் இதுவரை 2,522 பேர் கொரோன வைரஸுக்கு பலியாகியும், 79,354 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 24,940 குணமாகியும் உள்ளனர். .
.
பலியானோருள் சீனாவில் 2,495 பேரும், ஈரானிலும் 8 பேரும், தென்கொரியாவில் 7 பேரும், ஜப்பானில் 4 பேரும், இத்தாலியில் 3 பேரும் அடங்குவர்.
.