இத்தாலி கொரோனா மரண தொகை சீனாவிலும் அதிகம்

Coronavirus

கொரோனா வைரஸுக்கு பலியானோர் தொகை சீனாவில் கொரோனா வைரஸுக்கு பலியானோர் தொகையிலும் அதிகமா உள்ளது. கடந்த 24 மணித்தியாலத்துள் இத்தாலியில் 427 பேர் பலியாகி உள்ளனர்.
.
இத்தாலியின் தரவுப்படி அங்கு இதுவரை 3,405 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். சீனாவின் தரவுப்படி கொரோனாவுக்கு அங்கு இதுவரை 3,245 பேர் பலியாகி உள்ளனர்.
.
புதன்கிழமை சீனா முதல் தடவையாக எந்தவொரு புதிய கொரோனா நோயாளியையும் கொண்டிராத நாள். ஆனால் அதே தினம் சீனாவுக்கு வந்திருந்த 34 பேருக்கு கொரோனா தொற்றி இருந்தமை காணப்படுள்ளது.
.
அஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் குடி உரிமை அற்றோருக்கு அந்த நாடுகளுக்குள் நுழைய தற்காலிக தடை விதித்துள்ளது.
.
Total Deaths Recovered
World 227,105 9,642 84,649
China 80,928 3,245
Italy 41,035 3,405
Iran 18,407 1,284
Spain 17,147 767
Germany 10,999 24
US 10,442 150
France 9,134 264
South Korea 8,565 84
Switzerland 1,772 21
UK 2,626 103
Netherlands 2,051 58
Austria 2,013 6
Norway 1,424 3
Sweden 1,279 10
Belgium 1,243 10
Sri Lanka 53 0
.
Italy National Health Institute கூறியின்படி அங்கு கொரோனாவுக்கு பலியானோருள் 99% நோயாளிகள் ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்படோரே. 25.1% நோயாளிகள் ஏற்கனவே 1 நோய்க்கும், 25.6% நோயாளிகள் 2 நோய்களுக்கும், 48.5% நோயாளிகள் 3 நோய்களுக்கும் உலாகி இருந்தனர்.
.