இத்தாலியில் கொரோனாவுக்கு 366 பேர் பலி

Coronavirus

சீனாவில் கொரோனாவின் தாக்கம் குறைவடைந்து வந்தாலும், இத்தாலியில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இத்தாலியில் இதுவரை 366 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இன்று மட்டும் 133 பேர் பலியாகி உள்ளனர்.
.
கொரோனா வைரஸ் நோய்க்கு உட்பட்டோர் தொகையும் இத்தாலியில் 5,883 இல் இருந்து 7.375 ஆக அதிகரித்து உள்ளது.
.
கொரோனா காரணமாக மிலான் (Milan), வெனிஸ் (Venice) போன்ற பெரும் நகரங்களில் உள்ள சுமார் 16 மில்லியன் இத்தாலியர் தம்மிடங்களில் முடக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பயணங்களை மேற்கொள்ள விசேட அனுமதி பெறவேண்டும். இங்கு பாடசாலைகள் உட்பட அனைத்து கூடும் இடங்களும் ஏப்ரல் 3 ஆம் திகதிவரை மூடப்பட்டு உள்ளன.
.
உலக அளவில் சுமார் 107,000 இந்த வைரஸால் பாதிக்கப்பட்டும், 3,600 பலியாகியும் உள்ளனர். ஈரானில் 194 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் 470 பாதிக்கப்பட்டும், 21 பேர் பலியாகியும் உள்ளனர்.
.