இதுவரை காலமும் அமெரிக்காவின் வழமையான நட்பு நாடுகள் மீது பாய்ந்து, ரஷ்ய சனாதிபதி பூட்டினை புகழ்ந்து பாடிய ரம்ப் ஞாயிறு தான் பூட்டின் மீது மிகவும் கோபம் (very angry) கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
தான் ரஷ்யாவுக்கும் யூக்கிறேனுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு பூட்டின் ஆதரவு தராமையாலேயே தான் பூட்டின் மீது கோபம் கொண்டுள்ளதாக ரம்ப் காரணம் கூறியுள்ளார்.
அத்துடன் தனது யுத்த நிறுத்த திட்டத்துக்கு பூட்டின் விரைவில் இணங்காவிட்டால் ரஷ்ய எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளில் இருந்தான இறக்குமதிக்கு மேலும் 50% புதிய இறக்குமதி (tariff) விதிக்கவுள்ளதாகவும் ரம்ப் மிரட்டி உள்ளார். தற்போது ரஷ்ய எரிபொருளை அதிகம் கொள்வனவு செய்யும் நாடுகள் சீனாவும், இந்தியாவும்.
யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கியை மிரட்டி யுத்த நிறுத்தத்துக்கு தேவையானபடி பலதை யூக்கிறேன் தரப்பில் விட்டுக்கொடுக்க வைக்க ரம்பால் முடிந்தாலும் பூட்டினை மிரட்ட முடியவில்லை.
அத்துடன் ரம்ப் தான் 3ம் தடவையும் அமெரிக்க சனாதிபதி ஆக முயற்சி செய்வதாக கூறியுள்ளார். 1951ம் ஆண்டு நடைமுறை செய்யப்பட்ட 22nd Amendment ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் அமெரிக்க சனாதிபதி ஆவதை தடை செய்கிறது.