இன்று சனிக்கிழமை நாசா (NASA) தனது மிகப்புதிய RS-25 என்ற ஏவு இயந்திரத்தை ஒத்திகை செய்துள்ளது. மொத்தம் 8 நிமிடங்கள் இந்த பரிசோதனை இடம்பெற இருந்தாலும், 1 நிமிடம் 15 செக்கன்களில் பரிசோதனை இடைநிறுத்தப்படுள்ளது. பாதகமான தரவுகளே காரணம் என்றாலும், விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. வரும் காலங்களில் நாசா இந்த இயந்திரத்தை பயன்படுத்தியே அண்டவெளி பயணங்களை மேற்கொள்ளும்.
அண்டவெளி பயணங்களுக்கான ஏவுகலம் இந்த RS-25 என்ற பெயர்கொண்ட இயந்திரங்களில் நான்கை கொண்டிருக்கும். இந்த 4 இயந்திரங்களும் மொத்தம் 7 மெகா நியூட்டன் உந்தத்தை வழங்கும் (7,000 கிலோ நியூட்டன், அல்லது 1.6 மில்லியன் lb உந்தம்).
இந்த இயந்திர பரிசோதனை Mississippi மாநிலத்தில் உள்ள Bay St Louis என்ற இடத்தில் உரமாக நிறுவப்பட்ட கட்டுமானம் ஒன்றில் பொருத்தி செய்யப்பட்டது.
Artemis என்ற திட்டத்தின் கீழ் நடைமுறை செய்யப்படும் இந்த இயந்திரங்கள் சந்திரனை சுற்றி வருவதற்கான அடுத்த பயணத்தில் பயன்படுத்தப்படும். சந்திரனுக்கு அப்பால் செல்லவும் இது பயன்படுத்தப்படலாம்.
மொத்தம் 8 நிமிடங்கள் இடம்பெற இருந்த இந்த பரிசோதனைக்கு சுமார் 2.6 மில்லியன் லிட்டர் (700,000 gallons) liquid hydrogen, liquid oxygen ஆகிய இரண்டு எரிபொருட்கள் பயன்படுத்தப்பட இருந்தன. இவை கடும் சூடான நீராவியை மட்டுமே விளைபொருளாக வெளியிடும். வெளியேறும் நீராவியின் வெப்பம் சுமார் 3,316 C (6,000 F) ஆக இருக்கும்.