1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை தற்கொலை குண்டு மூலம் கொலை செய்த காரணத்தால் சிறை தண்டனை அனுபவித்துவரும் 6 பேர் இன்று வெள்ளி இந்திய நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
நளினி, PR ரவிச்சந்திரன், Robert Payas, சுதேந்திரராஜா, ஜெயக்குமார், ஸ்ரீஹரன் ஆகியோரே அந்த 6 பேரும். மேற்படி 6 பேரும் 30 ஆண்டு கால சிறை தண்டனையை திருப்திகரமான முறையில் செய்ததால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
தற்கொலை குண்டு கொண்ட கொலையாளி பெண் ராஜீவின் பாதத்தை தொட்டு கும்பிட முனைவதுபோல் குனிந்த நிலையில் குண்டை வெடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் சுமார் 14 பேர் பலியாகி இருந்தனர்.
பலியானவர்களில் ஒருவரான Haribabu என்ற புகைபிடிப்பாளர் குண்டு வெடிக்க முன் தற்கொலையாளியை படம் பிடித்து இருந்தார். குண்டு வெடிப்பில் தப்பிய புகைப்பட கருவியில் இருந்த அந்த படத்தில் தற்கொலையாளி தனு என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட தேன்மொழி ராஜரத்தினம் என்று பின்னர் அறியப்பட்டது.
தாக்குதலை திட்டமிட்டவர் என்று கூறப்படும் சிவராசன் 1991ம் ஆண்டு பெங்களூரில் போலீசாரின் சுற்றிவளைப்பு ஒன்றின்போது மேலும் 6 பேருடன் 1991ம் ஆண்டு தற்கொலை செய்தார்.
தனது 46ம் வயதில் அரசியல் பரப்புரைக்கு சென்ற ராஜீவ் தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் என்ற இடத்தில் புலிகளின் பெண் தற்கொலையாளியால் கொலை செய்யப்பட்டார்.
1987ம் ஆண்டில் இந்தியா இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நடைமுறை செய்து, IPKF படையை இலங்கைக்கு அனுப்பியதே புலிகள் ராஜீவ் மீது பகை கொள்ள பிரதான காரணம். IPKF விரைவில் புலிகளுடன் மோத , புலிகள் வன்னி காட்டுக்கு சென்றனர். சுமார் 1,000 இந்திய படையினர் இலங்கையில் பலியானதாக கூறப்படுகிறது.
1987ம் ஆண்டின் முற்பகுதியில் புலிகள் வடமராட்சியை இலங்கை இராணுவத்திடம் இழந்து இருந்தனர். புலிகளின் அந்த வீழ்ச்சி இந்தியா இலங்கைக்குள் நுழைய வழி வகுத்தது.
மேற்படி 6 பேரின் விடுதலையை இந்திய காங்கிரஸ் கட்சி கண்டித்து உள்ளது.
2011ம் ஆண்டு KP என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் பிரபாகரன் ராஜீவை கொலை செய்தது தவறு (mistake) என்று கூறியிருந்தார்.