ஜப்பானில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான 6 மாத காலத்தில் 37,227 பேர் மரணிக்கும்போது தனிமையில் வாழ்ந்துள்ளனர். இவர்களில் 70% மானோர் 65 வயதுக்கும் அதிகமான வயதுடையோர் என்று கூறுகிறது ஜப்பானின் National Police Agency.
இவர்களில் 5,635 பேர் 70-74 வயதுடையோர், மேலும் 5,920 பேர் 75-79 வயதுடையோர், 7,498 பேர் 80 வயதுக்கும் அதிக வயதுடையோர் ஆவர்.
இவ்வாறு மரணித்தோரில் 40% மானோரின் உடல்கள் ஒரு தினத்துள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஆனால் 3,939 உடல்கள் குறைந்தது ஒரு மாதத்தின் பின்னரே கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மேலும் 130 உடல்கள் குறைந்தது ஒரு ஆண்டின் பின்னரே கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
2050ம் ஆண்டளவில் ஜப்பானில் 10.8 மில்லியன் வயோதிபர் (65+ வயதுடையோர்) தனிமையில் வாழ்வர் என்று Japanese National Institute of Population and Social Security Research கூறியுள்ளது.