ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று சனிக்கிழமை, உள்ளூர் நேரப்படி இரவு 10:40 மணிக்கு, திருமண வீடு ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கு 63 பேர் பலியாகியும், 180 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.
.
தாக்குதலுக்கு உள்ளன குடும்பம் சியா (Shia Hazara) இனத்தை சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. சியா இஸ்லாமியர் மீது சுனி இஸ்லாமிய குழுக்கள் தாக்குதல் நடாத்துவதுண்டு. தலபான், ISIS ஆகியன சுனி குழுக்களே. ஆனால் தலபான் தாம் இந்த தாக்குதலை செய்யவில்லை என்று கூறியுள்ளது.
.
இன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் ஒரு தற்கொலை தாக்குதல் என்றும் கூறப்படுகிறது.
.
தற்போது தலபானும் அமெரிக்காவும் சமாதான உடன்படிக்கை ஒன்றை நோக்கி செயல்பட்டு வருகின்றன. உடன்படிக்கை சாத்தியமாயின், அங்கு 18 வருடங்களாக செயல்பட்டு வரும் அமெரிக்க படைகள் அமெரிக்கா திரும்புவது சாத்தியமாகும்..
.