ஆப்கானித்தானில் மிகப்பெரிய குண்டை போட்டது அமெரிக்கா

GBU-43B

ஆப்கானித்தானில் GBU-43/B என்ற தமது மிக பெரிய குண்டு ஒன்றை இன்று போட்டுள்ளதாக அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்ரகன் (Pentagon) கூறியுள்ளது. இந்த குண்டு ஒன்று சுமார் 11 தொன் வெடிமருந்தை கொண்டிருக்கும்.
.
இந்த குண்டு குகைகளில், மற்றும் சுரங்கங்களில் மறைந்து இருப்போரையும், மறைத்து வாக்கப்பட்டு உள்ளவற்றையும் அழிக்க வல்லது.
.
இந்த குண்டை ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானின் எல்லை அருகே, உள்ள ISIS குழுவை அழிக்க போட்டதாக கூறப்பட்டாலும், இந்நிகழ்வு இவ்வகை குண்டை வடகொரியா மீது போடுவதற்கான ஒத்திகையாக அல்லது எச்சரிக்கையாக இருக்கலாம்.
.

இவ்வகை குண்டை அமெரிக்கா 2003 ஆம் ஆண்டில் ஒத்திகை பார்த்திருந்தது. அப்போது இக்குண்டு ஏற்படுத்திய புகைமண்டலத்தை 32 km தூரத்தில் இருந்து பார்க்கக்கூடியதாக இருந்தது.
.