Mali, Burkina Faso, Niger ஆகிய இராணுவ ஆட்சிகளை கொண்ட மூன்று நாடுகளும் தாம் பாதுகாப்பு கூட்டணியில் ஒன்றில் இணைவதாக அறிவித்துள்ளன. Alliance of Sahel Staes என்ற இந்த அணியில் ஒன்றை வெளிநாடு ஒன்று தாக்கினால் மற்றைய இரண்டும் பாதுகாப்புக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாடுகளும் முன்னர் பிரான்சின் ஆக்கிரமிப்பில் இருந்த நாடுகள். சுதந்திரத்துக்கு பின்னரும் பிரான்ஸ் தனது ஆளுமையை இங்கே செலுத்தி வந்தது. ஆனால் தற்போதைய இராணுவ ஆட்சியாளர் பிரான்சுக்கு எதிராக இயங்க ஆரம்பித்துள்ளனர்.
Mali, Burkina Faso ஆகிய இரண்டும் தமது நாடுகளில் இருந்த பிரஞ்சு படைகளை ஏற்கனவே வெளியேற்றி உள்ளன. கடையாக இராணுவ ஆட்சிக்கு வந்த Niger உம் பிரான்ஸை வெளியேற கூறியுள்ளது.
பிரான்ஸ் வேறு அண்டை நாடுகளில் இருந்து இந்த 3 நாடுகள் மீதும் தாக்குதல் தொடுக்கக்கூடும் என்ற பயம் 3 நாடுகளுக்கும் உள்ளது.