அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆரம்பித்த வரி யுத்தத்தால் இன்று திங்கள் மீண்டும் ஆசிய, ஐரோப்பிய பங்கு சந்தைகள் தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்துள்ளன.
ஜப்பானின் Nikkei பங்கு சந்தை சுட்டி திங்கள் 6.5% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. அஸ்ரேலிய, தென் கொரிய, இந்திய சுட்டிகளும் கூடவே சரிந்து உள்ளன.
சீனாவின் Shanghai Composite பங்கு சந்தை சுட்டி திங்கள் 8% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஹாங்காங் Hang Seng சுட்டி திங்கள் 13% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஜெர்மனியின் Dax சுட்டி 10% ஆலும், லண்டன் FTSE 100 சுட்டி 6% ஆலும் வீழ்ச்சி அடைந்துள்ளன.
மேலும் சில மணி நேரத்தில் ஆரம்பமாகவுள்ள அமெரிக்க, கனடிய சுட்டிகளும் திங்கள் மீண்டும் பெரும் வீழ்ச்சியை அடையவுள்ளன என்று தெரிகிறது.
அமெரிக்காவின் Goldman Sachs வங்கி அமெரிக்கா பொருளாதார முடக்கத்தை (recession) அடையும் நிகழ்தகவை 35% இல் இருந்து 45% ஆக உயர்த்தி உள்ளது. JPMorgan உலக பொருளாதார முடத்துக்கான நிகழ்தகவு 60% என்றுள்ளது.