ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் பயணிக்கும் விமான சேவை நிறுவனங்கள் பறக்க பாதுகாப்பான விமான பாதை இன்றி நெருக்கடியில் உள்ளன.
யுத்தம் காரணமாக யூக்கிறேனுக்கு மேலாக பறப்பது தடைப்பட்டது. மேற்கின் தடை காரணமாக ரஷ்யா மேலாக பறப்பதுவும் பல விமான சேவைகளுக்கு தடைப்பட்டது.
இஸ்ரேல்-ஈரான் முறுகல் நிலை காரனமாக அந்த இரு நாடுகளுக்கும் மேலான வான் பரப்பும், அவற்றுக்கு இடையே உள்ள ஈராக், ஜோர்டான் சிரியா வான் பரப்புகளும் தற்போது நெருக்கடியில் உள்ளன.
இதனால் பல விமான சேவைகள் நீண்ட சுற்று பாதைகளை பயன்படுத்துகின்றன. இதனால் பயண நேரம் அதிகரிப்பதுடன், செலவும் அதிகரிக்கிறது.
வேறு வழியின்றி Singapore Airlines, British Airways, Lufthansa, Air France, Turkish Airlines EVA ஆகியன தற்போது ஆப்கானிஸ்தான் மேலாக பறக்க ஆரம்பித்துள்ளன. பின்தங்கிய நாடான ஆப்கானிஸ்த்தானில் விமானங்களின் பயணத்துக்கு உதவும் air traffic control கட்டமைப்பு இல்லை. அதனால் விமானிகள் தம்முள்ளே கதைத்தே பாதையை பங்கிடவேண்டி உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தினமும் சுமார் 20 விமானங்களே ஆப்கானிஸ்தான் மேலாக பறந்திருந்தன. ஆனால் இந்த மாதம் தினமும் சுமார் 130 விமானங்கள் ஆப்கானிஸ்தான் மேலாக பறக்கின்றன.
அமெரிக்காவின் FAA ஆப்கானிஸ்தான் மேலாக பறக்கும் விமானங்களை 32,000 அடிக்கும் மேலாக பறக்க கேட்டுள்ளது.