1967ம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு உரிய West Bank பகுதியை ஆக்கிரமித்து இருந்தது. அன்றில் இருந்து இன்று வரை ஆக்கிரமித்த பகுதிகளில் யூதர்களுக்கு வீடுகளை கட்டி வழங்கி வருகிறது இஸ்ரேல். அமெரிக்கா இதற்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.
West Bank பகுதியில் மேலும் 1,300 வீடுகளை யூதர்களுக்கு கட்ட இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை அறிவித்து இருந்தது. இந்த வீடுகளுக்கான கட்டு வேலைகள் நாளை புதன்கிழமை முதல் ஆரம்பமாகும்.
அமெரிக்காவின் பைடென் அரசு வழமைபோல் ஒரு கவலையை மட்டும் தெரிவித்து உள்ளது. அதனால் வளமை போலவே ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து பாலஸ்தீனர்கள் விரட்டப்பட்டு, யூதர்கள் குடியமர்த்தப்படுவர்.
அதேவேளை அமெரிக்கா இஸ்ரேலுக்கு மேலும் $1 பில்லியன் உதவி வழங்க முன்வந்துள்ளது. இது ஆண்டுதோறும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கு $3.8 பில்லியன் உதவிக்கும் மேலானது.
ஐ.நாவும் திங்கள் இந்த விசயம் தொடர்பாக கவலை ஒன்றை தெரிவித்ததுடன் மட்டும் தனது பணியை நிறுத்திக்கொண்டது.
பாலஸ்தீனர்களை நசுக்கும் நோக்கில் இஸ்ரேல் அண்மையில் 6 பலஸ்தீன தொண்டர் அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகள் என்றும் பட்டியல் இட்டிருந்தது. அவ்வாறு செய்வதன் மூலம் இந்த அமைப்புகளுக்கு உதவிகள் செல்வதை தடுக்கிறது இஸ்ரேல்.