சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் பலஸ்தீனர் நிலத்தை ஆக்கிரமித்து அங்கு தமக்கு சாதகமான இரட்டை சட்டம் ஒன்றை நடைமுறை செய்து இருந்தது. அந்த சட்டப்படி ஆக்கிரமித்த இடங்களில் உள்ள சட்டவிரோத குடியிருப்பு யூதர்கள் இஸ்ரேலின் சட்டங்களுக்கு அமைய ஆளப்படுவர். இஸ்ரேலின் civil, criminal சட்டங்களுக்கு உட்படும் இவர்கள் இஸ்ரேல் வாக்குகளையும் கொண்டுள்ளனர். அனால் இதே இடத்தில் சந்ததி சந்ததியாக குடியிருக்கும் பலஸ்தீனர் இஸ்ரேலின் இராணுவ ஆட்சிக்கு உட்படுவர்.
மேற்படி இரட்டை சட்டம் இந்த மாதம் முடிவடையும் நிலை தற்போதைய இஸ்ரேலிய அரசு இந்த சட்டத்தை தொடர பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு விட்டது. ஆனால் இன்று திங்கள் இடம்பெற்ற வாக்கெடுப்பு 58 எதிர்ப்பு வாக்குகளையும், 52 ஆராதவு வாக்குகளையும் பெற்று தோல்வியில் முடிந்துள்ளது.
அதனால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் வாழும் யூதர்கள் அடுத்த மாதம் முதல் எவ்வாறான சட்டத்துக்கு உட்படுவர் என்பது குழப்பமாகி உள்ளது. இவர்களும் இராணுவ சட்டத்துக்கு உள்ளாகலாம்.
சுமார் 3 மில்லியன் பலஸ்தீனர் வாழும் West Bank பகுதியில் சுமார் 600,000 யூதர்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். இந்த குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்துக்கு முரணானவை.
தற்போதைய இஸ்ரேலிய அரசு 8 கட்சிகளின் கூட்டணியில் உருவாக்கப்பட்டது. இந்த 8 கட்சிகளில் ஒன்று இஸ்ரேலிய பலஸ்தீனர்களின் கட்சி, அத்துடன் இவற்றில் சில பரம விரோதிகள்.
வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தாலும், அரசு இன்று கவிழவில்லை. ஆனாலும் மீண்டும் ஒரு தேர்தல் இடம்பெற சாத்தியங்களும் உண்டு.