அஸ்ரேலியாவின் Labor கட்சி செனட்டரான (Senator) 29 வயது Fatima Payman இன்று தனது Labor கட்சியிலிருந்து வெளியேறி சுயேட்சை செனட்டராக அமர்ந்தார்.
அண்மையில் அஸ்ரேலிய Green கட்சி பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் ஒன்றை சபை வாக்கெடுப்புக்கு எடுத்து இருந்தது.
இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமான ஆதரவை வழங்கும் Labor கட்சி இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்த்து. ஆனாலும் Fatima தனது கட்சியை மீறி Green கட்சியின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.
Fatima மீது விசனம் கொண்ட Labor கட்சி இவரை கட்சி caucus இல் இருந்து காலவரையறை இன்றி இடைநிறுத்தம் செய்தது. இந்நிலையிலேயே Fatima Labor கட்சியை விட்டு வெளியேறி உள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிறந்த Fatima தலிபான் ஆட்சி காலத்தில் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து அங்கு 3 ஆண்டுகள் வாழ்ந்து பின் அஸ்ரேலியா சென்றிருந்தார்.
அஸ்ரேலியாவில் upper house மொத்தம் 76 செனட்டர்களையும், lower house 151 உறுப்பினர்களையும் கொண்டது.