அஸ்ரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட strawberry பழங்களுக்குள் தையல் ஊசி இருப்பது அங்கு பெரும் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு பல பழ விற்பனை நிலையங்கள் strawberry பழ விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளன.
.
அஸ்ரேலியாவிலும், நியூ சீலாந்திலும் அரசுகள் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்து உள்ளன. இந்த விடயம் தொடர்பாக தகவல் வழங்குவோருக்கு A$ 100,000 ($72,000) சன்மானம் வழங்கவும் Queensland அரசு முன்வந்துள்ளது.
.
ஊசி இருந்த strawberry பழத்தை உண்டு காயத்துக்கு உள்ளான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
.
முதலில் ஊசி கொண்ட பழங்கள் உள்ளமை Queensland பகுதியில் அறியப்பட்டன. பின்னர் New South Wales, Victoria, South Australia, Tasmania ஆகிய இடங்களுக்கும் இது பரவி உள்ளது.
.