மேற்கு அஸ்ரேலியாவை இல்ஸா (Ilsa) என்ற மிகப்பெரிய சூறாவளி தாக்குகிறது. கடந்த 14 ஆண்டுகளில் அஸ்ரேலியாவை தாக்கும் மிகப்பெரிய சூறாவளி இதுவாகும்.
Port Headland என்ற இடத்தை தாக்கவுள்ள இந்த சூறாவளி சுமார் 315 km/h வேகத்திலான காற்றுவீச்சை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நரகர்த்தப்பட்டு உள்ளனர்.
இந்த சூறாவளிக்கு சில இடங்கள் 400 mm (15.7 அங்குல) மழை வீழ்ச்சியையும் பெறும் என்று வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது.
Port Headland இரும்புக்கான மூல பொருளை (iron ore) அகழும் பிரதானமான இடமாகும்.