அஸ்ரேலியாவின் தேர்தல் முடிபுகளின்படி அங்கு தற்போது ஆட்சியில் உள்ள Liberal கட்சி தலைமையிலான Liberal National அணி மீண்டும் ஆட்சியை அமைக்க உள்ளது. அதனால் தற்போதைய பிரதமர் Scott Morrison தொடர்ந்தும் பிரதமராக பதவியில் இருப்பார்.
.
வாக்குகளை எண்ணும் பணிகள் தொடர்ந்தாலும், இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி ஆட்சியில் உள்ள Liberal அணி 76 ஆசனங்களை கைப்பற்றலாம் என்று கணிக்கப்படுகிறது. மொத்தம் 151 ஆசனங்களை கொண்ட அவையில் குறைந்தது 76 ஆசனங்கள் பெரும்பான்மை ஆட்சியை அமைக்க உதவும்.
.
இம்முறை Labor கட்சி பலத்த வெற்றியை அடையும் என்று கணிப்பு வாக்கெடுப்புகள் கூறி இருந்தன. ஆனால் Labor கட்சி சுமார் 69 ஆசனங்களை மட்டும் வெல்லும் நிலையில் இருப்பது அந்த கணிப்பு வாக்கெடுப்புகளின் கணிப்பீடுகளை பொய்யாக்கி உள்ளது.
.
Labor கட்சி ஆட்சியை கைப்பற்றாமையால், அதன் தலைவர் Bill Shorten தலைமை பதிவில் இருந்து விலகவுள்ளார்.
.