அஸ்ரேலியாவின் தென்கிழக்கே பரவி வரும் காட்டு தீ காரணமாக சுமார் 4,000 மக்கள் அப்பகுதி கடற்கரையில் முடக்கப்பட்டு உள்ளனர் என்று Victoria நகரின் அவசரகால சேவை அதிகாரியான Andrew Crisp இன்று செவ்வாய் கூறியுள்ளார்.
.
சிலர் வளங்கள் மூலம் கடலுக்குள்ளும் சென்று தம்மை பாதுகாத்துள்ளனர். இங்குள்ள சில கடற்கரைகள் உல்லாச பயணிகளால் நிரம்பியுள்ள கோடை காலம் இது.
.
Melbourne பகுதியில் சுமார் 100,000 மக்கள் நேற்று திங்கள் வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர்.
.
அக்டோபர் மாதம் முதல் சுமார் 34,000 சதுர km பரப்பளவு தீக்கு இரையாகி உள்ளது. அத்துடன் சுமார் 1,000 வீடுகளும் தீக்கு இரையாகி உள்ளன. குறைந்தது 12 பேர் பலியாகியும் உள்ளனர்.
.
சுமார் ஒரு வருடத்துக்கு முன்னரேயே Tasman கடல் வளமையிலும் 1.66 C அதிக வெப்பநிலையில் இருந்துள்ளது என்று அந்நாட்டு Bureau of Meteorology கூறியுள்ளது.
.