அஸ்ரேலியாவில் தொடரும் வெள்ள அனர்த்தம்

அஸ்ரேலியாவில் தொடரும் வெள்ள அனர்த்தம்

அஸ்ரேலியா தொடர்ந்தும் வெள்ள அனர்த்தத்தால் பாரிய பாதிப்பை அடைந்து வருகிறது. அங்கு பல்லாயிரம் மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர். மாடுகள் போன்ற பண்ணை மிருகங்கள் மிதமான வெள்ளத்துள் மூழ்கி மரணிக்கின்றன. சில மரணித்த மாடுகளின் உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன. மாடு ஒன்று தனது தலையை மட்டும் நீரின் மேல உயர்த்தி பிடித்து தன்னை பாதுகாக்க முனைவது வீடியோ ஒன்றில் பதிவாகி உள்ளது.

குறிப்பாக New South Wales பகுதியே மிகையான வெள்ளத்தை கொண்டுள்ளது. இங்கு கடந்த 4 தினங்களுள் 853 mm மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் பிரித்தானியாவின் லண்டன் பகுதியில் ஆண்டு ஒன்றுக்கு 557 mm மழை வீழ்ச்சியே கிடைக்கும். Sydney நகரை அண்டிய சில இடங்களில் 1 மீட்டர் உயர மழை வீழ்ச்சி இடம்பெற்று உள்ளது.

சிலந்திகள், பாம்புகள் போன்ற நிலமட்டத்தில் வாழும் உயிரினங்களும் உயர் நிலத்தை நோக்கி படையெடுக்கவும் ஆரம்பித்து உள்ளன. 1960ம் ஆண்டுக்கு பின் அங்கு இடம்பெறும் பெரு வெள்ளம் இது என கூறப்படுகிறது.

Sydney நகருக்கு வடக்கே செல்லும் Hawkesbury ஆறு ஏற்கனவே 30 அடி வெள்ளத்தால் உயர்ந்து உள்ளது. இதன் வெள்ள நீரின் உயரம் விரைவில் 42 அடி ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பெரு நகரான Sydney பகுதியில் வரும் 24 முதல் 36 மணித்தியாலத்தில் சுமார் 50 முதல் 100 mm (2 – 4 அங்குல) மழை வீழ்ச்சி இருக்கும் என்று வானிலை நிலையம் கூறுகிறது.