அஸ்ரேலியாவில் அமெரிக்காவின் Department of State, Institue for War & Pease Reporting (IWPR) ஆகிய இரண்டினதும் உதவிகளுடன் Decode China என்ற சீன மொழி செய்தி சேவை ஆரம்பமாகிறது. இதன் ஒரே நோக்கம் அஸ்ரேலியாவில் உள்ள சுமார் 600,000 சீனர்களை சீனாவுக்கு எதிராக மாற்றுவதே.
.
அஸ்ரேலியாவில் உள்ள சில சீன எதிர்ப்பு சீனர்கள் Decode China வில் இணைந்து உள்ளனர். அதில் சிட்னியில் உள்ள University of Technology உதவி பேராசிரியர் Feng Chongyi, Wai Ling Yeung ஆகியோரும் அடங்குவர்.
.
பிரித்தானியாவின் லண்டன் நகரில் தலைமையகத்தை கொண்ட IWPR அமைப்பு 2016 ஆம் ஆண்டில் $13.6 மில்லியன் உதவியை அமெரிக்கா, பிரித்தானியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளிடம் இருந்து பெற்றுள்ளது.
.
IWPR அமைப்பு ஆப்கானித்தான், ஈராக், சூடான், ஆகிய நாடுகளில் ஏற்கனவே செயல்படுகிறது. நோபல் பரிசு பெற்ற Malala Yousafzai என்பவரும் IWPR மூலம் வளர்த்து எடுக்கப்பட்டவரே.
.