அலுமினியம், இரும்புக்கு ரம்ப் புதிய 25% இறக்குமதி வரி

அலுமினியம், இரும்புக்கு ரம்ப் புதிய 25% இறக்குமதி வரி

அலுமினியம், இரும்பு ஆகிய இரண்டு உலோகங்களுக்கும் சனாதிபதி ரம்ப் திங்கள் முதல் உலக அளவில் புதிதாக 25% இறக்குமதி வரி அறவிட சட்டம் நடைமுறை செய்துள்ளார். இந்த வரி குறுகிய காலத்துக்கு கனடாவை அதிகம் பாதிக்கும்.

அமெரிக்கா அதிகளவு இரும்பை கனடா, பிரேசில், மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளில் இருந்தே கொள்வனவு செய்கிறது.

அதேவேளை பெப்ருவரி 1ம் திகதி முதல் நடைமுறை செய்யவிருந்த கனடிய, மெக்ஸிக்கோ பொருட்கள் மீதான ரம்பின் புதிய 25% இறக்குமதி வரி மார்ச் 1ம் திகதிவரை பின்போடப்பட்டுள்ளது.

ரம்ப் வெள்ளி அறிவித்த வரி முதலில் அஸ்ரேலியாவிலிருந்து வரும் உலோகங்களுக்கும் அறவிடப்படும் என்று கூறினாலும், பின்னர் அஸ்ரேலியாவிலிருந்தான இறக்குமதிக்கு விதிவிலக்கு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.