வரலாற்றில் முதல் தடவையாக ரஷ்யாவின் TU-95 குண்டுவீச்சு விமானங்களும், சீனாவின் Xian H-6 குண்டுவீச்சு விமானங்களும் அமெரிக்காவின் அலாஸ்கா (Alaska) மாநிலத்தின் அருகே யுத்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
கடந்த புதன் இடம்பெற்ற இந்த பயிற்சியில் இரண்டு TU-95 களும், இரண்டு H-6 களும் பங்கெடுத்துள்ளன. இவற்றுக்கு ரஷ்யாவின் Sukhoi Su-30SM, Su-35s யுத்த விமானங்கள் பாதுகாப்பு வழங்கின.
சீனாவின் H-6 விமானங்கள் ரஷ்யாவின் விமானப்படை தளம் ஒன்றில் இருந்தே பயணத்தை ஆரம்பித்துள்ளன.
இவற்றை நோட்டம் விட அமெரிக்காவின் F-16, F-35 யுத்த விமானங்களும், கனடாவின் CF-18 யுத்த விமானங்களும் சென்றுள்ளன.
அதேவேளை கனடாவுக்கு மேலே சென்ற அடையாளம் காணப்படாத பொருள் ஒன்றை NORAD அமைப்பின் கீழ் இயங்கும் F-22 யுத்த விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது.