இன்று அமெரிக்காவின் அயோவா (Iowa) மாநிலத்தில் இடம்பெறும் Republican கட்சி சார்பில் போட்டியிடும் 2024 ஆண்டு சனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்யும் உட்கட்சி தேர்தலில் ரம்ப் முன்னணியில் உள்ளார்.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி ரம்ப் 51.3% வாக்குகளையும் (2,153 வாக்குகள்), Ron DeSantis 21.5% வாக்குகளையும் (904 வாக்குகள்), நிக்கி Haley 19.2% வாக்குகளையும் (807 வாக்குகள்), விவேக் ராமசாமி 7.1% (296 வாக்குகள்) வாக்குகளையும் பெற்று உள்ளனர். ஏனையோர் புறக்கணிக்கத்தக்க வாக்குகளை பெற்றுள்ளனர்.
அயோவா முடிவுகள் Republican கட்சியை மட்டுமல்லாது கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பல மேற்கு/நேட்டோ நாடுகளை கிலி கொள்ள வைத்துள்ளன. இந்த நாடுகள் ரம்பின் வெறுப்பை கொண்ட நாடுகள்.
இதனிடையே ரம்ப் இறுதி தேர்தலில் போட்டியிடுவதை அமெரிக்க உயர் நீதிமன்றம் தடை செய்தால் நிலைமை மேலும் குழப்பம் அடையும்.
ஏனைய மாநிலங்களுக்கான உட்கட்சி தேர்தல்கள் வரும் மாதங்களில் இடம்பெறும்.