அயோத்தியை நீதிமன்றம் இந்துக்களிடம் கையளிப்பு

Babri_Babur

இராமர் பிறந்த இடம் என்று இந்துக்களால் கருதப்படும் பாபர் பள்ளிவாசல் உள்ள அயோத்தியை இந்துக்களிடம் முழுமையாக கையளிக்கும்படி இந்திய நீதிமன்றம் இன்று சனிக்கிழமை தீர்ப்பு கூறியுள்ளது. அத்துடன் பதிலுக்கு வேறு எங்காவது இடத்தில் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிக்க அரசு 5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் என்றும் இந்த நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.
.
உத்தர பிரதேசத்தில் உள்ள சர்சைக்குரிய பாபர் பள்ளிவாசல் (Babur Mosque) இவ்விடத்தில் 1528 ஆம் ஆண்டு மோகல் காலத்தில் (Mughal) அவரது இரணுவ ஜெனரல் Mir Baqi என்பவரால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்துக்கள் அவ்விடத்தில் இராமர் கோவில் இருந்ததாகவும் அதை உடைத்தே பள்ளிவாசல் கட்டப்பட்டதாகவும் கூறி மீண்டும் அங்கொரு இராமர் கோவில் கட்ட முனைந்து வருகின்றனர்.
.
1949 ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், இந்த பள்ளிவாசலில் ஒரு இராமர் சிலை வைக்கப்பட்டது. தற்கால முரண்பாடுகள் அதில் இருந்து ஆரம்பமாகின.
.
1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளிவாசல் Vishva Hindu Parishad போன்ற இந்து அரசியல் குழுக்களால் உடைக்கப்பட்டது.
.
2010 ஆம் ஆண்டு இந்திய நீதிமன்றம் இப்பகுதியை 3 துண்டுகளாக பிரித்து அவற்றை இந்து மகா சபை (Hindu Maha Sabha), சுனி முஸ்லீம் Waqf Board, இந்து Nirmohi Akhara ஆகியவற்றிடம் வழங்கியது.
.
அண்மையில் இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றம் சென்றது. இன்றைய தீர்ப்பில், அப்பகுதி முழுவதும் இந்துக்களிடம் கையளிக்கப்பட்டு உள்ளது.
.
இந்த தீர்ப்பும், காஸ்மீரின் மேலதிக உரிமைகள் பறிப்பும் இந்துவாத பா.ஜ. கட்சிக்கு மேலும் இந்துவாதிகளின் ஆதரவை உறுதி செய்துள்ளது.
.