புதன்கிழமை, 5 ஆம் திகதி, அயோத்தில் இராமர் கோவில் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு இந்திய பிரதமர் மோதி செல்வார் என்று கூறப்படுகிறது. கரோனா தாக்கத்தால் வீழ்ச்சி அடையும் ஆதரவு, அயோத்தியின் இந்த பயணத்தால் மீண்டும் வளர்ச்சி அடையலாம். அவருடன் கூடவே அமித் சா (Amit Shah), அத்வானி உட்பட பல இந்துவாதிகள் அங்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அமித் சா தற்போது கரோனா தொற்றி உள்ளார்.
Mughal ஆட்சி காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில், கட்டப்பட்ட Babri மசூதியை 1992 ஆம் ஆண்டு பா.ஜ. ஆதரவாளர் உடைத்து இருந்தனர். அப்போது சுமார் 2,000 பேர் வன்முறைகளுக்கு பலியாகினர். அதை தொடர்ந்து இந்த விசயம் நீதிமன்றில் இழுபட்டு வந்தது.
கடந்த நவம்பர் மாதம், மோதி ஆட்சியில், நீதிமன்றம் மசூதி இருந்த இடத்தை முற்றாக இந்துவாதிகள் கையில் வழங்கியது. பதிலுக்கு 5 ஏக்கர் நிலம் ஒன்றை வேறு ஓர் இடத்தில் மசூதி கட்ட வழங்குமாறும் நீதிமன்றம் கூறியது.
முன்னர் இராமர் கோவில் இருந்த இடத்திலேயே மசூதி கட்டப்பட்டதாக இந்துவாதிகள் கூறுகின்றனர். ஆனால் அதை நிரூபிக்க இதுவரை அகழ்வு ஆய்வு ஒன்றும் செய்யப்படவில்லை. அவ்வாறு செய்யும் நோக்கமும் இந்துவாதிகளுக்கு இல்லை.
கரோனா காரணமாக நிகழ்ச்சிகள் குறைந்த அளவு பங்காளிகளையே கொண்டிருக்கும்.
இந்த அடிக்கல் நாட்டலுக்கு இரு தொண்டர்கள் 151 சிறிய ஆறுகளில் இருந்தும், 8 பெரிய ஆறுகளில் இருந்தும் நீரும், 3 கடல்களில் இருந்து கடல் நீரும் இலங்கையின் 16 இடங்களில் இருந்து மண்ணும் எடுத்து சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.